×

“தமிழகத்தின் 2வது தலைநகரம் மதுரை” : அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கோரிக்கை!

மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க கோரி அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் பழமையான நகராக தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை இருந்து வருகிறது. மூன்று தமிழ் சங்கங்கள் மதுரையில் அமைக்கப்பட்டு அவை அழிந்தாலும் நான்காவது தமிழ் சங்கம் அமைக்கப்பட்டு இன்னும் ஆக்கத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெருநகரமாக உள்ள மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 22 சதுர கிலோமீட்டர் பரப்பளவு 10.9 லட்சம்
 

மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க கோரி அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பழமையான நகராக தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை இருந்து வருகிறது. மூன்று தமிழ் சங்கங்கள் மதுரையில் அமைக்கப்பட்டு அவை அழிந்தாலும் நான்காவது தமிழ் சங்கம் அமைக்கப்பட்டு இன்னும் ஆக்கத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெருநகரமாக உள்ள மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 22 சதுர கிலோமீட்டர் பரப்பளவு 10.9 லட்சம் மக்கள் தொகையும் கொண்ட மதுரை மாநகரில் தமிழ், ஆங்கிலம், சவுராஷ்டிரா போன்ற மொழிகள் பேசப்படுகிறது. சங்க காலத்தில் மிகவும் பெருமை வாய்ந்த நகரமாக விளங்கி வரும் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள். இப்படி பல சிறப்புகளை அம்மாநகரம் கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் 2 ஆம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளார். மதுரை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முதல்வர், துணை முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர் உதயகுமார் இரண்டாவது தலைநகராக மதுரையை மாற்றினால் தென்மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.