மதுரை டூ விழுப்புரம்.. பாதுகாப்புடன் தொடங்கியது சிறப்பு ரயில் சேவை!

 

மதுரை டூ விழுப்புரம்.. பாதுகாப்புடன் தொடங்கியது சிறப்பு ரயில் சேவை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் ரயில் சேவைகள் முடக்கப்பட்டு இருந்தது. நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர், பல சேவைகளுக்கு அனுமதி அளித்ததன் படி ரயில்சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் புறநகர் ரயில்கள் இயக்கப்படாது என்றும் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இன்று மதுரையில் முதல் சிறப்பு ரயில் சேவை தொடங்கியுள்ளது.

மதுரை டூ விழுப்புரம்.. பாதுகாப்புடன் தொடங்கியது சிறப்பு ரயில் சேவை!

மதுரையில் இருந்து விழுப்புரம் செல்லு இந்த சிறப்பு ரயில் இன்று காலை 7 மணிக்கு மதுரையில் இருந்த புறப்பட்ட நிலையில், நண்பகல் 12 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். அவசர தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் பாஸ் கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டம் நடைமுறையில் இருக்கையில் தற்போது ரயிலில் பயணம் செய்வதற்கும் இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயமாக சானிடைசரை உபயோகப்படுத்த வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.