×

கன்னியாகுமரியில் 4,434 ஆக அதிகரித்த தொற்று பாதிப்பு: விழுப்புரத்திலும் கட்டுக்குள் வராத கொரோனா!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,972பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 96,438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதூம் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரியில் மேலும் 130
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,972பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.


கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 96,438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதூம் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரியில்  மேலும் 130 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,434 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 3,449ஆக உயர்ந்துள்ளது.