×

“ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு” : மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

சட்ட பேரவைக்குள் தமிழகத்தில் குட்கா பொருட்கள் எளிதாக கிடைப்பதாக கூறி 2017 ஆம் ஆண்டு திமுக எம்எல்ஏ-க்கள் குட்காவை கொண்டுவந்தனர். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டமன்றத்துக்கு எடுத்து வந்தது தொடர்பான உரிமை மீறல் குழு திமுக எம்எல்ஏ-க்கள் 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் அடங்கிய அமர்வில்
 

சட்ட பேரவைக்குள் தமிழகத்தில் குட்கா பொருட்கள் எளிதாக கிடைப்பதாக கூறி 2017 ஆம் ஆண்டு திமுக எம்எல்ஏ-க்கள் குட்காவை கொண்டுவந்தனர். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டமன்றத்துக்கு எடுத்து வந்தது தொடர்பான உரிமை மீறல் குழு திமுக எம்எல்ஏ-க்கள் 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவில் குட்காவை சட்டப்பேரவைக்கு கொண்டுவந்ததாக திமுகவினருக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதில்,”திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்தது ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு. சட்டமன்ற வரலாற்றில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திமுக மனதார வரவேற்கிறது. இன்னும் குட்கா விற்பனை தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை” என்று அவர் கூறியுள்ளார்.