×

திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கொரோனா தொற்றால் காலமானார்!

தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த ரஹ்மான்கான் தமிழக அமைச்சரவையில் 1996 இல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், இருமுறை தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைதலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும், 1989 இல் பூங்காநகர் தொகுதியிலும், 1996 இல் இராமநாதபுரம் தொகுதியிலும் வெற்றி கண்டவர். திமுகவின் அதிரடி பேச்சாளராகவும், உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் திமுக கட்சியை சேர்ந்த
 

தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த ரஹ்மான்கான் தமிழக அமைச்சரவையில் 1996 இல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், இருமுறை தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைதலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும், 1989 இல் பூங்காநகர் தொகுதியிலும், 1996 இல் இராமநாதபுரம் தொகுதியிலும் வெற்றி கண்டவர். திமுகவின் அதிரடி பேச்சாளராகவும், உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

இந்நிலையில் திமுக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கொரோனா தொற்றால் காலமானார். சென்னையில் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.