×

“திமுக எம்எல்ஏ-க்களை மோடி, அமித்ஷாவால் தொட்டு கூட பார்க்க முடியாது”

தபால் வாக்குகளை எளிதாக பெறுவதற்கு சதித்திட்டம் தீட்டுவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கும் , மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் முறையில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக 80 வயதுக்கு மேற்பட்டோர் தபாலில் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. தபால் வாக்கை வாக்குசாவடி அதிகாரி நேரில் சென்று பெற வேண்டும் என்பதால் முறைகேடு
 

தபால் வாக்குகளை எளிதாக பெறுவதற்கு சதித்திட்டம் தீட்டுவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கும் , மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் முறையில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக 80 வயதுக்கு மேற்பட்டோர் தபாலில் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. தபால் வாக்கை வாக்குசாவடி அதிகாரி நேரில் சென்று பெற வேண்டும் என்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் இதனால் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமகன்களுக்கு தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தபால் வாக்குகளை எளிதாக பெறுவதற்கு சதித்திட்டம் தீட்டுகிறார்கள். புதுச்சேரியை போல் தமிழக திமுக எம்எல்ஏக்களை அமித்ஷா, மோடியால் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு நடைமுறையால் பீகாரில் 12 ஆயிரம் ஓட்டில் ஆட்சி பறிபோனது என்றார். முன்னதாக புதுச்சேரியில் ஆளும் கட்சிக்கு எதிராக அக்கட்சியின் எம்எல்ஏக்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். இதில் முன்னாள் எம்எல்ஏ நமச்சிவாயம் பாஜகவில் சேர்ந்து கொண்டார். புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருப்பதால் ஆட்சியை பிடிக்க, பாஜக முனைப்பு காட்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.