×

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நவீனமயமாக்கல் – புதிய செயலி விரைவில் வருகிறது !!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நவீனமயமாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனித்து வரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நவீனமயமாக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்கள் சென்றடைவதை உறுதிப்படுத்த புதிய செயலி உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. மாநிலத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் குறித்த அனைத்து தரவுகளும் பதிவேற்றம் செய்யப்படும், அவர்களுக்கு எந்த திட்டங்கள் பயன் தரும் என்பதும் தெரிவிக்கப்படும்.வேலைவாய்ப்புகள், பயிற்சிகள், நேர்காணல்கள், சிகிச்சைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் விற்பனையாளர்கள், உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைத்து தகவல்களும்
 

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நவீனமயமாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனித்து வரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நவீனமயமாக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்கள் சென்றடைவதை உறுதிப்படுத்த புதிய செயலி உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. மாநிலத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் குறித்த அனைத்து தரவுகளும் பதிவேற்றம் செய்யப்படும், அவர்களுக்கு எந்த திட்டங்கள் பயன் தரும் என்பதும் தெரிவிக்கப்படும்.வேலைவாய்ப்புகள், பயிற்சிகள், நேர்காணல்கள், சிகிச்சைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் விற்பனையாளர்கள், உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைத்து தகவல்களும் ஒருங்கிணைக்கப்படும்.

கல்வி உதவித்தொகை, சிகிச்சை, உபகரணங்கள் வாங்குவதற்காக கிரவுட் பண்டிங் வசதியும் ஏற்படுத்தப்படும். சுமார் 8,00,000 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவர் என்றும் செயலியை ஏறக்குறைய 50,000 நன்கொடையாளர்கள், 5,000 ஊழியர்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் முழுமையான செயல்பாட்டிற்கு வரும் என சொல்லப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் தன்னிறைவு பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு இடையூறாக உள்ள அனைத்துத் தடைகளும் நீக்க நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.