×

“மதனின் பேச்சுக்களை காது கொடுத்து கேட்க முடியவில்லை” : உயர் நீதிமன்றம் கண்டனம்!

‘டாக்சிக் மதன் 18+’ என்ற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை நேரலை செய்து வந்த பப்ஜி மதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதனுடன் சேர்ந்து ஆபாசமாகப் பேசிய பெண்ணின் குரல் மதனின் மனைவி கிருத்திகா உடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவும் அவர் சேனலின் நிர்வாகி என்பதாலும் நேற்று கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 8 மாத கைக்குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழலில் தலைமறைவாக
 

‘டாக்சிக் மதன் 18+’ என்ற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை நேரலை செய்து வந்த பப்ஜி மதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதனுடன் சேர்ந்து ஆபாசமாகப் பேசிய பெண்ணின் குரல் மதனின் மனைவி கிருத்திகா உடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவும் அவர் சேனலின் நிர்வாகி என்பதாலும் நேற்று கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 8 மாத கைக்குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சூழலில் தலைமறைவாக உள்ள மதனை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், மதன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கை நீதிபதி தண்டாயுதபாணி விசாரித்த நிலையில் மதன் யூடியூப் சேனலை பின்தொடர்வோர் 30 சதவீதம் பேர் பள்ளி மாணவர்கள் என நீதிமன்றத்தில் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. தொழில் போட்டியாளர்கள் அளித்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

பாதிக்கப்பட்டவர்கள் புகார் தரவில்லை. இதனால் ஆபாசமாக பேசி வரும் பப்ஜி மதனுக்கு முன் ஜாமீனுக்கு வழங்கக் கூடாது என காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பேசிய நீதிபதி, “மதன் ஆடியோவின் ஆரம்பமே கேட்க முடியாத வகையில் உள்ளது. குழந்தைகளை கெடுக்கும் வகையிலும் , பெண்களை அவமதிக்கும் வகையிலும் மதன் பேசியுள்ளார். மதனின் பேச்சை காது கொடுத்து கேட்டு விட்டு நாளை வருமாறு முன்ஜாமீன் கோரிய வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினார்.