×

“அடுத்த டார்க்கெட் இல்லத்தரசிகள்” : இன்ப அதிர்ச்சி கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனல் பறக்கிறது. ஒருபுறம் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. மறுபுறம் 10 ஆண்டுகளுக்கு பிறகாவது விட்ட இடத்தை பிடித்துவிட வேண்டும் என்று திமுக தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் அதிரடியாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு
 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனல் பறக்கிறது. ஒருபுறம் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. மறுபுறம் 10 ஆண்டுகளுக்கு பிறகாவது விட்ட இடத்தை பிடித்துவிட வேண்டும் என்று திமுக தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் அதிரடியாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

அதிமுகவின் நலத்திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் பேசி வரும் அவர், திமுகவை பற்றியும் குறை சொல்ல மறக்கவில்லை. திமுக – அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் பழிபோடும் அரசியல், பழிவாங்கும் அரசியல் என பயணித்து கொண்டிருந்தாலும், கிடைக்கும் கேப்பில் அதிரடியான அறிவிப்புகளை அறிவிக்க, எடப்பாடியார் மறப்பதில்லை.

மாணவர்களுக்கு இலவச 2 ஜிபி டேட்டா, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு என மாஸ் காட்டி வந்த அவர், ஒரே போடாக பயிர்கடனை தள்ளுபடி செய்தது திமுகவினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ரூ. 12, 110 கோடி கூட்டறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிக்கும் முன்னரே நமது டாப் தமிழ் நியூஸ் இந்த செய்தியை வெளியிட்டு இருந்தது.

அந்த வகையில் மாணவர்கள், விவசாயிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடுத்து அதிரடியான அறிவிப்பை இல்லத்தரசிகளுக்காக வெளியிடவுள்ளாராம். விலையேற்றத்தால் நாள்தோறும் சிரமப்பட்டு கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கு வெளியாகும் புதிய அறிவிப்பு நிச்சயம் வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. என்னவா இருக்கும் நீங்களே கெஸ் பண்ணுங்க பார்ப்போம்…!