எடப்பாடியாரின் “அடுத்தடுத்த” அதிரடி அறிவிப்புகள் : கவுன்ட் டவுன் ஸ்டார்ட்!

 

எடப்பாடியாரின் “அடுத்தடுத்த” அதிரடி அறிவிப்புகள் :  கவுன்ட் டவுன் ஸ்டார்ட்!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் : தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் பிப்.2ம் தேதி செவ்வாய்கிழமை தொடங்குகிறது. சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடத்தப்படும் இக்கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றி தொடங்கி வைக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெறாமல், கலைவாணர் அரங்கில் நடத்தப்பட உள்ள நிலையில் , இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

எடப்பாடியாரின் “அடுத்தடுத்த” அதிரடி அறிவிப்புகள் :  கவுன்ட் டவுன் ஸ்டார்ட்!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடப்பது வழக்கம். இருப்பினும் இந்த முறை காரணமாக சட்டப்பேரவை கூட்டமானது பிப்ரவரி மாதத்தில் தொடங்குகிறது. இக்கூட்டத்தின் முதல் நாளான பிப்ரவரி 2ஆம் தேதி ஆளுநர் உரையாற்றிய பிறகு அவை ஒத்திவைக்கப்படும் . இதை தொடர்ந்து அலுவல் குழு உறுப்பினர்கள் கூடி எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு எடுப்பர். சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத்தொடர் என்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அத்துடன் இது ஆளும் அதிமுக ஆட்சியின் இறுதியான சட்டப்பேரவை கூட்டம் என்பதால் கடுமையான வாக்குவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும், சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்கள் ,அலுவலக ஊழியர்கள் , பத்திரிகையாளர்கள் என அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா இல்லை என்று முடிவு வந்த பிறகே அனுமதிக்கப்படுவர்.

அதிமுக அரசின் அதிரடி அறிவிப்புகள்:

எடப்பாடியாரின் “அடுத்தடுத்த” அதிரடி அறிவிப்புகள் :  கவுன்ட் டவுன் ஸ்டார்ட்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுக அரசு பல அதிரடி அறிவிப்புகளை அறிவிக்கவுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக – திமுக கட்சிகள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக வாக்குறுதிகளை அள்ளிதெறித்து வருகின்றன.

இந்த சூழலில் தேர்தலுக்கு முன்பே, அதிமுக பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாயக்கடன்கள் உள்ளிட்டவற்றை அதிமுக அரசு முழுவதுமாக ரத்து செய்யவுள்ளதாம். இதன் மூலம் 15லட்சம் பயனர்கள் பயனடையவுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதிமுகவின் யுக்தி

எடப்பாடியாரின் “அடுத்தடுத்த” அதிரடி அறிவிப்புகள் :  கவுன்ட் டவுன் ஸ்டார்ட்!

பொதுவாக ஆட்சிக்கு வந்தால் “இதை செய்கிறோம்; அதை தருகிறோம்” என வாக்குறுதிகளை அள்ளிவிடும் கட்சிகளுக்கு மத்தியில், ஆட்சியில் இருக்கும் போதே விவசாயக்கடன்களை ரத்து செய்வது என்பது அசாதாரணமான பார்க்கப்படுகிறது.

முன்னதாக திமுக ஆட்சி அமைந்தால் விவசாயக்கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஆனால் மக்களுக்கு தேவையானதை தேர்தலுக்கு முன்பே செய்து கொடுத்துவிட்டு, பின்னர் அவர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பது என்பது நல்ல யுக்தியாகவே தெரிகிறது. இதனால் வரும் தேர்தலில் திமுகவுக்கு, அதிமுக நிச்சயம் பலத்த போட்டியாக இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகவே உள்ளது.