×

தமிழக பாஜகவில் யாருக்கு என்ன பதவி! விவரம் உள்ளே…

தமிழக பாஜக மாநில நிர்வாகிகளின் இரண்டாவது பட்டியலை அக்கட்சியின் தலைவர் முருகன் வெளியிட்டார். தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக சென்ற பிறகு அந்த பதவிக்கு கடந்த மார்ச் 11 ஆம் தேதி முருகன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து 10 நாட்களுக்கு முன்பாக மாநில துணைத்தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் அணித்தலைவர்கள் ஆகியவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மாநில நிர்வாகிகள் பட்டியலை பாஜக மாநில தலைவர் முருகன் வெளியிட்டுள்ளார், மாநில செயற்குழு
 

தமிழக பாஜக மாநில நிர்வாகிகளின் இரண்டாவது பட்டியலை அக்கட்சியின் தலைவர் முருகன் வெளியிட்டார்.

தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக சென்ற பிறகு அந்த பதவிக்கு கடந்த மார்ச் 11 ஆம் தேதி முருகன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து 10 நாட்களுக்கு முன்பாக மாநில துணைத்தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் அணித்தலைவர்கள் ஆகியவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மாநில நிர்வாகிகள் பட்டியலை பாஜக மாநில தலைவர் முருகன் வெளியிட்டுள்ளார், மாநில செயற்குழு உறுப்பினராக 38 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா துணைத் தலைவராகவும், வீரப்பனின் மகள் வித்தியா ராணிக்கு இளைஞர் அணி துணைத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது. செயற்குழு உறுப்பினர்களாக நடிகர் ராதாரவி, திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா, இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன் மாநில துணைத்தலைவர்கள் பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

நடிகர் ஆர்.கே. சுரேஷ் மாநில ஓபிசி அணி மாநில துணை தலைவராகவும் இயக்குனர் பேரரசு, இசை அமைப்பாளர் தீணா ஆகியோர் பாஜக கலை கலாச்சார பிரவு மாநில செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் நடிகர் ராதா ரவி, நடிகர் விஜய்குமார் , கங்கை அமரன் ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.