பாஜகவில் இணைய போகிறாரா அமமுக பொருளாளர் வெற்றிவேல்?

 

பாஜகவில் இணைய போகிறாரா அமமுக பொருளாளர் வெற்றிவேல்?

மக்களவை தேர்தலுக்கும் முன்னதாகவும், படுதோல்விக்கு பின்பும் அமமுகவிலிருந்து விலகி விபி கலைராஜன், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன், புகழேந்தி உள்ளிட்ட பலர் அக்கட்சியிலிருந்து விலகி திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இணைந்தனர்.

இந்நிலையில் அமமுக பொருளாளரான வெற்றிவேல் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகின. இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் தனது டிவிட்டர் பக்கத்தில், நான் பாஜகவில் இணைய போவதாக ஒரு வதந்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறது. வதந்தி பரப்புவது கடும் கண்டனத்திற்குரியது. துரோகத்திற்கு எதிரான தனது பயணத்தில் எப்போதும் மாற்றமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.