×

விருதுநகர் மாவட்டத்தின் 166 கட்டுப்பாட்டு பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,785 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகரில் இன்று காலை நிலவரப்படி, 3 அரசு மருத்துவர்கள், ESI மருத்துவமனை ஊழியர்கள் 9 பேர் உள்பட 216 பேருக்கு கொரோனா உறுதியாகியதால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,785 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகரில் இன்று காலை நிலவரப்படி, 3 அரசு மருத்துவர்கள், ESI மருத்துவமனை ஊழியர்கள் 9 பேர் உள்பட 216 பேருக்கு கொரோனா உறுதியாகியதால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 5570 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 6000-ஐ நெருங்குகிறது. 2947 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் 2580 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அங்கு பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 166 கட்டுப்பாட்டு பகுதிகளிலும் மறு உத்தரவு வரும் வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் அறிவித்துள்ளார். விருதுநகரில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் பால் விற்பனை, மருந்தகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.