×

தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1,60,907ஆக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 39லட்சத்து 86ஆயிரத்து 311ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 93ஆயிரத்து 521 பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை சுமார் ஒரு லட்சத்து 51ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில்
 

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 39லட்சத்து 86ஆயிரத்து 311ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 93ஆயிரத்து 521 பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை சுமார் ஒரு லட்சத்து 51ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட4,538பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 48,669 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,56,998 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,755 பேர் ஆண்கள், 1,783 பேர் பெண்கள். 109பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. இன்று மட்டும் 79பேர் உயிரிழந்தனர். 23பேர் தனியார் மருத்துவமனையிலும், 56 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,315ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,391பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,807ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.