×

இந்தாண்டு ஆகஸ்ட் 15ல் கிராம சபை கூட்டம் நடைபெறாது : தமிழக அரசு

கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்திஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராமசபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில், ஊராட்சியின் வரவு செலவுகள், திட்ட பணிகள், பயனாளிகள் தேர்வு செய்து, ஒப்புதல் பெறப்படும். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் அசாத்திய சூழல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் ஒரே நேரத்தில் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 15ல் வழக்கம்போல நடைபெறும் கிராம சபை கூட்டம் கொரோனா பொதுமுடக்கம்
 

கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்திஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராமசபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில், ஊராட்சியின் வரவு செலவுகள், திட்ட பணிகள், பயனாளிகள் தேர்வு செய்து, ஒப்புதல் பெறப்படும்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் அசாத்திய சூழல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் ஒரே நேரத்தில் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 15ல் வழக்கம்போல நடைபெறும் கிராம சபை கூட்டம் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்தாண்டு நடைபெறாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக  கொரோனா தொற்று பரவல் காரணமாக நாளை கிராமசபைக் கூட்டத்தை நடத்த தேவையில்லை என ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் .