×

‘பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள்’ கொரோனா தொடர்பாக ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் கடிதம்!

கொரோனா நோய்த்தொற்றலால் பாதிப்படும் மனிதர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதுமே அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் மட்டும் நேற்றையை (ஜூன் 19) கணக்கின் 54,449 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐ.சி.எம்.ஆர் (Indian Council of Medical Research) அவ்வப்போது மாநிலங்களுக்கு மருத்துவ வழிகாட்டுதல்களை செய்துவருகிறது. அதன்படி ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, அனைத்து மாநிலங்களுக்கும் சில அறிவுறுத்தல்களைக் கூறும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “அறிகுறிகள்
 

கொரோனா நோய்த்தொற்றலால் பாதிப்படும் மனிதர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதுமே அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் மட்டும் நேற்றையை (ஜூன் 19) கணக்கின் 54,449 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஐ.சி.எம்.ஆர் (Indian Council of Medical Research) அவ்வப்போது மாநிலங்களுக்கு மருத்துவ வழிகாட்டுதல்களை செய்துவருகிறது. அதன்படி ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, அனைத்து மாநிலங்களுக்கும் சில அறிவுறுத்தல்களைக் கூறும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “அறிகுறிகள் உள்ளவர்களை சோதனை செய்வதும், அவர்களின் பயணித்த விபரங்களை டிராக் செய்வதும் சரியான சிகிச்சை அளிப்பதுதான் கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்கவும் மேலும் பரவாமல் தடுக்கவும் இருக்கும் ஒரே வழி. தொடக்கத்தில் நோயைக் கண்டறிதல் நோய்த்தொற்றலைக் கட்டுப்படுத்த உதவும், அதனால் பல உயிர்கள் காப்பற்றப்படும். எனவே பரிசோதனை அதிகப்படுத்த வேண்டியது அவசியம்’ என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

மேலும், “பரிசோதனை செய்ய வரும் நபர்கள் அளிக்கும் தகவல் தவறாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, சோதனை காலத்தில் அவர்கள் அளிக்கும் தகவல்களைச் செக் செய்யவும், அவர்கள் குறிப்பிடும் மொபைல் எண்ணை மிஸ்டு கால் அளித்து உண்மையான எண்தானா என்று உறுதிசெய்துகொள்ளவும்’ என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.