நல்ல ஆரோக்கியமான உணவ சாப்பிடுங்க கொரோனா வராது- ஐசிஎம்ஆர்

 

நல்ல ஆரோக்கியமான உணவ சாப்பிடுங்க கொரோனா வராது- ஐசிஎம்ஆர்

நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு தகவல்களை குறிப்பாக இந்த நோயை எதிர்ப்பதற்கும் எதிர்ப்பு சக்தி உருவாக்குவதற்கான சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறார் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானி பிரதீப் கவுர். கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பலர் தொடர்ச்சியாக கேட்டு வருகிறார்கள் சில விஷயங்களை இங்கே சொல்கிறேன், அதற்கு வரும்முன் காப்பதே சிறந்தது நோய் தொற்றிலிருந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளையும் கொண்டாலே இந்த நோயை எதிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை பெறமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நல்ல ஆரோக்கியமான உணவ சாப்பிடுங்க கொரோனா வராது- ஐசிஎம்ஆர்

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானி பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு நாளைக்கு 4 லிருந்து 5 வகையான காய்கறி பழங்களை உட்கொள்ள வேண்டும், புரத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், முழு தானிய உணவு வகைகளை சாப்பிட வேண்டும், பால்லான பொருட்களை உண்ணலாம். ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் – இதில் வேகமாக நடத்தல், உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், யோகா செய்தல் ஆகியவை அடங்கும் உடற்பயிற்சியை வீட்டிலுள்ள யோகா செய்யலாம் அப்படி செய்யும்போது கூட்டமாக செய்யாமல் தனிமனித இடைவெளியை பின்பற்றி உடற்பயிற்சி செய்ய வேண்டும். வீட்டில் இருக்கக் கூடியவர்களுக்கு இருக்க கூடியவர்களுக்கு ஹைபர்டென்ஷன், சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் இருந்தால் அவர்களுக்கு உணவு பழக்கங்களை மாற்றும் முன்னர் மருத்துவரின் ஆலோசனையை கேட்க வேண்டும் மேலும், வீட்டிலிருந்தபடியே அவர்களுக்கான சர்க்கரை அளவு ரத்த கொதிப்பு அளவை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். வைட்டமின் சி மற்றும் டி இருக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் அப்படி இல்லையென்றால் அதற்கான மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம். அதேபோல தூக்கம் மிக முக்கியமானது நமது தின வாழ்க்கையில் இருக்கக்கூடிய மன அழுத்தத்தை சரி செய்யவும் உடலை சரியான விகிதாச்சாரத்தில் சக்தியுடன் வைத்துக்கொள்ளவும் தூக்கம் முக்கியம். புகைப் பழக்கத்தை விடுவதற்கு நீங்கள் எதிர்பார்த்திருந்த சரியான நேரம் இதுதான் இப்பொழுது அந்த பழக்கத்தை விட்டுவிடுங்கள் உங்கள் நுரையீரலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.” என அறிவுறுத்தியுள்ளார்.