×

வணிக நோக்கில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர்க்கும் இ-பாஸ் : தமிழக அரசு

தமிழகத்தில் கோவிட் 19 நோய் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். தொற்று வேகம் சற்று குறைந்திருப்பதாகவும், பொருளாதார இழப்பீட்டை சீர்செய்யும் நோக்கிலும் சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் குறிப்பாக இபாஸ் நடைமுறை தளர்வுகளுடன் தொடர்ந்து அமலில் உள்ளது. திருமணம், இறப்பு, மருத்துவ சேவை, வணிகம் உள்ளிட்ட காரணங்களுக்காக இபாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வணிகத்திற்காக வெளிமாநிலங்களிருந்து தமிழகம் வரும் தொழிற்துறையினருக்கு இபாஸ்
 

தமிழகத்தில் கோவிட் 19 நோய் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். தொற்று வேகம் சற்று குறைந்திருப்பதாகவும், பொருளாதார இழப்பீட்டை சீர்செய்யும் நோக்கிலும் சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் குறிப்பாக இபாஸ் நடைமுறை தளர்வுகளுடன் தொடர்ந்து அமலில் உள்ளது. திருமணம், இறப்பு, மருத்துவ சேவை, வணிகம் உள்ளிட்ட காரணங்களுக்காக இபாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வணிகத்திற்காக வெளிமாநிலங்களிருந்து தமிழகம் வரும் தொழிற்துறையினருக்கு இபாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வணிக நோக்கில் வெளிமநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்கள் இங்கு 72 மணிநேரம் மட்டுமே தங்குவதாக இருந்தால் அவர்களுக்கு இபாஸ் வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்துதலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த சலுகையானது விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, சட்டம் சார்ந்த துறைக்கும் பொருந்தும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.