×

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பம் : இலவச புத்தகம், சீருடை வழங்க ஏற்பாடு!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறும் 2 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கையும் இன்று முதல் தொடங்கும் என்றும் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாட்களிலேயே இலவச புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகள்
 

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறும் 2 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கையும் இன்று முதல் தொடங்கும் என்றும் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாட்களிலேயே இலவச புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியது. 1ஆம் வகுப்பில் சேர மாணவர்கள் நேரில் வராவிடில் பெற்றோர் தரும் ஆவணங்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.

சேர்க்கையின் போதே மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை,கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் அதிகளவில் இருந்தால் காலையில் 20பேர், மாலையில் 20பேர் என சேர்க்கை நடத்தப்படும் என்று அரசு வழிக்காட்டுதலில் கூறியுள்ளது.