×

சென்னை கொளத்தூர் தொகுதியில் நிவாரண உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

கொரோனா வைரஸ் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வகை வைரஸில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,315ஆக அதிகரித்துள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு அரசும், மற்ற கட்சிகளும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக
 

கொரோனா வைரஸ் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.

இந்த கொடிய வகை வைரஸில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,315ஆக அதிகரித்துள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை  இழந்துள்ள மக்களுக்கு அரசும், மற்ற கட்சிகளும் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் கொரோனா பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் அத்தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கொரோனா தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில் நேரடியாக களப்பணியில் இறங்கியுள்ள ஸ்டாலின் தொற்று ஏற்படாமலிருக்க மாஸ்க் மற்றும் கையுறை அணிந்து நிவாரண பொருட்களை அளித்தார். அவருடன் எம்பி தயாநிதி மாறன் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.