4 மாவட்டங்களுக்கு ரூ.1000 நிவாரணம்.. இன்று முதல் விநியோகம்!

 

4 மாவட்டங்களுக்கு ரூ.1000 நிவாரணம்.. இன்று முதல் விநியோகம்!

கொரோனா வைரஸ் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வகை வைரஸில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் கடந்த 19 ஆம் தேதி முதல் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களுக்கு ரூ.1000 நிவாரணம்.. இன்று முதல் விநியோகம்!

அதனால் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். மேலும், அம்மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடை அட்டைதாரர்களின் வீடு தேடி வந்து 22 ஆம் தேதி முதல் நிவாரணத் தொகை கொடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன் படி, இன்று முதல் அந்த 4 மாவட்டங்களிலும் ரூ.1000 உதவித்தொகை விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும், 26 ஆம் தேதி வரை வழங்கப்படும் இந்த பணத்தை பெறாதவர்கள் 29, 30-ம் தேதிகளில் பணத்தை ரேஷன் கடைகளில் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.