×

செப்.1 முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி!

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இபாஸ் நடைமுறையில் இருந்து வருகிறது. அத்துடன் மக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் குறைந்தால் மட்டுமே பொதுமுடக்கம் முடிவுக்கு வரும். இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பால் மூடப்பட்டிருந்த நூலகங்கள்
 

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக இபாஸ் நடைமுறையில் இருந்து வருகிறது. அத்துடன் மக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் குறைந்தால் மட்டுமே பொதுமுடக்கம் முடிவுக்கு வரும்.

இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பால் மூடப்பட்டிருந்த நூலகங்கள் மீண்டும் திறப்பதால் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு நூலகத்தில் அனுமதி இல்லை என்றும் காலை 8 மணிமுதல் 2 மணிவரை மட்டுமே நூலகங்கள் திறந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.