×

தமிழகத்தில் 3,501 நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க அரசாணை!

தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் ரேஷன் கடை தொடங்கப்படும் எனவும் சென்னையில் 400 நடமாடும் ரேஷன் கடைகள் விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்திருந்தார். இந்நிலையில் நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர் என்றும் அரசு கட்டடம், உள்ளாட்சி நிறுவன கட்டடம், மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் ரேஷன் கடையை திறக்கலாம் என்றும்
 

தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் ரேஷன் கடை தொடங்கப்படும் எனவும் சென்னையில் 400 நடமாடும் ரேஷன் கடைகள் விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு  அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர் என்றும் அரசு கட்டடம், உள்ளாட்சி நிறுவன கட்டடம், மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் ரேஷன் கடையை திறக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நடமாடும் ரேஷன் கடைகள் செயல்படும் இடம்,நேரம்,நாட்களுக்கு ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் எனவும் நடமாடும் ரேஷன் கடைகள் திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆக.20க்குள் அறிக்கை தர வேண்டும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.