ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் வெங்காயம்! 

 

ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் வெங்காயம்! 

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.  

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.  

வெங்காயம்

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், விலையேற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் 24 ரூபாய்க்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். அடுத்த ஐந்து நாட்களில் மத்திய அரசிடம் இருந்து ஒரு லட்சம் கிலோ வெங்காயம் நுகர்வு செய்யப்பட்டு, 400 ரேஷன் கடைகள் மற்றும் 70 நடமாடும் வாகனங்கள் மூலம் மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ வரை வழங்கப்படும் என்றும் கெஜ்ரிவால் கூ‌றினார்.