×

மயிலாடுதுறை: குத்தாலத்தில் 5 நாட்கள் முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் கொரோனோ வெருவித் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செயலில் உள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு வணிகர் சங்கங்கள் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட பகுதியில் தாமாக முன்வந்து தன் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மெயின் ரோட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 62 வயது முதியவர் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் அவரது
 

தமிழகம் முழுவதும் கொரோனோ வெருவித் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செயலில் உள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு வணிகர் சங்கங்கள் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட பகுதியில் தாமாக முன்வந்து தன் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மெயின் ரோட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 62 வயது முதியவர் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினர் ஐந்து நபருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க குத்தாலம் பகுதியில் நாளை முதல் வரும் 19 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு முழு ஊரடங்கை கடைப்பிடிக்க போவதாக வணிகர்கள் அறிவித்துள்ளனர். இதனால் உள்ள 1000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்படும்.