முழு முடக்கம் நீட்டிப்பா?- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் கருத்து

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் மாநிலம் முழுக்க முழு ஊரடங்கு கொண்டுவரும் முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதைக் கட்டுப்படுத்த சென்னைக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், சென்னையில் இருந்த பலரும் சொந்த ஊர் திரும்பினர். தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு 1200 என்ற அளவில் குறைந்துள்ளது. ஆனால், மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், “கொரோனா பாதிப்பு முழுமையாக குறையும் வரை முழு முடக்கத்தை நீட்டித்துக்கொண்டே இருக்க முடியாது. கொரோனா பாதிப்பு குறைய 6 மாதங்கள் அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம். அது வரை மக்களை கட்டிப்போட முடியாது. அரசு சொல்லும் நெறிமுறைகளை பின்பற்றி நடந்தாலே கொரோனா தொற்று வர வாய்ப்பில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

கன்னியாஸ்திரீ பாலியல் வழக்கு… முன்னாள் பிஷப் மீது குற்றச்சாட்டு பதிவு!

கன்னியாஸ்திரீ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஜலந்தர் முன்னாள் பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கேரள நீதிமன்றம் குற்றச்சாட்டைப் பதிவு செய்தது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கிறிஸ்தவ பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முல்லக்கல். இவர்...

தலைமை நீதிபதியை விமர்சித்து ட்வீட்… வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என அறித்தது உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்து ட்வீட் வெளியிட்டது தொடர்பான வழக்கில் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளை விமர்சித்து மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ட்விட்டரில்...

“எலி மருந்தை சாப்பிட்ட 5 சிறுமிகள்” தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி; ராமநாதபுரத்தில் பரபரப்பு!

கொரோனா பாதிப்பு தமிழகத்தை புரட்டி போட்டு வருகிறது. பல மாதங்களாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு மக்களின் வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது. எப்போது இந்த கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பும் என...

தமிழக அரசுப் பணிகளில் திட்டமிட்டு வட இந்தியர்களை திணிப்பதை கைவிட வேண்டும் : வேல்முருகன் காட்டம்!

ரயில்வே துறை வங்கிகள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ,உளவுத்துறை, புலனாய்வுத்துறை, தேர்தல் ஆணையம் என தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வட இந்தியர்களே அதிகம் பணியமர்த்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆந்திரா,...
Do NOT follow this link or you will be banned from the site!