×

ரேஷன் கடைகளில் நாளை முதல் இலவச மாஸ்க் விநியோகம்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இதனிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் நாளை முதல் இலவசமாகவிநியோகம் செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக ரேஷன் கடைகளில் இலவசமாக
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இதனிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் நாளை முதல் இலவசமாகவிநியோகம் செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் விநியோக திட்டத்தை நாளை முதல் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். குடும்ப அட்டைகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு முகக் கவசங்களை தமிழக அரசு வழங்க உள்ளது.  வரும் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் இலவச முகக்கவசங்களை  பெற்று கொள்ளலாம் என்று தெரிகிறது.