×

குடும்பத்துடன் வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய முதல்வர் பழனிசாமி – வீடியோ

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினார். தனது வீட்டில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு மலர் தூவி, தீபாராதனை காட்டியும், தோப்புக்கரணம் போட்டும் வழிப்பட்டார். மேலும் அவர்
 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினார். தனது வீட்டில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு மலர் தூவி, தீபாராதனை காட்டியும், தோப்புக்கரணம் போட்டும் வழிப்பட்டார்.

மேலும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “எவ்வினையையும் தீர்க்கும் விநாயகர், இவ்வினையையும் தீர்க்க…சேலத்தில் எனது குடும்பத்துடன் வழிபட்டேன்….
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.