×

வேல்பூஜை செய்து சமூக வலைதளங்களில் போட்டோக்களை தெறிக்கவிடும் பாஜகவினர்!

முருகப்பெருமானை போற்றும் கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் நடைபெற்ற சம்பவத்தை எதிர்த்து, பாஜக சார்பில் பல்வேறு போராட்டங்களும் பூஜைகளும் நடத்தப்பட்டன. அந்த வகையில் இன்று முருகனை வழிபடும் விதமாக தமிழகம் முழுவதிலும் வீடுகளில் வேல்பூஜை நடத்த பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் அழைப்பு விடுத்திருந்தார். #Vel_Pooja pic.twitter.com/KSGooqRbUa — Gayathri Raguramm (@gayathriraguram) August 9, 2020 அதன்படி பாஜகவினர் வீடுதோறும் வேல் பூஜை செய்து கந்தசஷ்டிகவசம் ஒலிக்கும் நிகழ்வு இன்று 6 மணிக்கு தொடங்கியது. பாஜகவினர்
 

முருகப்பெருமானை போற்றும் கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் நடைபெற்ற சம்பவத்தை எதிர்த்து, பாஜக சார்பில் பல்வேறு போராட்டங்களும் பூஜைகளும் நடத்தப்பட்டன. அந்த வகையில் இன்று முருகனை வழிபடும் விதமாக தமிழகம் முழுவதிலும் வீடுகளில் வேல்பூஜை நடத்த பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி பாஜகவினர் வீடுதோறும் வேல் பூஜை செய்து கந்தசஷ்டிகவசம் ஒலிக்கும் நிகழ்வு இன்று 6 மணிக்கு தொடங்கியது. பாஜகவினர் அவரவர் இல்லங்களில் கந்தசஷ்டியை ஒலிக்கவிட்டு பூஜையில் ஈடுபட்டனர்.

அதனை வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். காயத்ரி ரகுராம், அவர்களது பகுதியில் உள்ள பாஜகவினருடன் இணைந்து கந்தசஷ்டி பூஜை செய்து அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் வானதி ஸ்ரீனிவாசன் தனது இல்லத்திலேயே வேல் பூஜை செய்து அது தொடர்பான புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் தனது வீட்டிலேயே பூஜை செய்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.