×

பெரியார் சிலை அவமதிப்பு விவகாரம் : பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் போலீஸில் சரண்!

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்து அப்பகுதியில் திக மற்றும் திமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுபோன்ற விஷம செயல்களில் ஈடுப்பட்டது யார் என விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்கு எம்பி கனிமொழி, பாமக ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக ஒருவர்
 

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்து அப்பகுதியில் திக மற்றும் திமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுபோன்ற விஷம செயல்களில் ஈடுப்பட்டது யார் என விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்கு எம்பி கனிமொழி, பாமக ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக ஒருவர் போத்தனூர் போலீசில் சரணடைந்துள்ளார். சரணடைந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பெரியார் அவமதிப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைவர்கள் சிலைகள் அவமதிக்கபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது கவனிக்கத்தக்கது.