×

’தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி’ OBC இடஒதுக்கீடு தீர்ப்பு பற்றி சீமான்

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு அமலில் இருக்கும் நிலையில் மருத்துவப் படிப்புக்கு மத்திய அரசு 27 சதவிகித இடஒதுக்கிடு எனச் சொல்வது சரியானது அல்ல என்ற தமிழக கட்சிக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. அதன் விசாரணை பல கட்டங்களில் நடைபெற்றது. அதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசே சட்டரீதியாக உத்தரவை இட முடியும். அதனால், மத்திய அரசே இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இட
 

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு அமலில் இருக்கும் நிலையில் மருத்துவப் படிப்புக்கு மத்திய அரசு 27 சதவிகித இடஒதுக்கிடு எனச் சொல்வது சரியானது அல்ல என்ற தமிழக கட்சிக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. அதன் விசாரணை பல கட்டங்களில் நடைபெற்றது. அதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசே சட்டரீதியாக உத்தரவை இட முடியும். அதனால், மத்திய அரசே இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் விஷயம் தொடர்பாக சட்டத்தை இயற்றி வெளியிட வேண்டும். இதை, அடுத்த  மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து தலைவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில்’ அகில இந்திய மருத்துவத் தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு சட்டமியற்ற வலியுறுத்தியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புச் செய்தி கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

இத்தீர்ப்பு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக ஒருமித்து ஓங்கி ஒலித்திட்ட‌ தமிழக மக்களுக்குத் கிடைத்த வெற்றியாகும்! சமூக நீதியை நிலைநாட்ட உழைத்திட்ட, அதற்காகக் குரல்கொடுத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

’ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யாது என நம்புகிறோம்’ அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இந்தத் தீர்ப்பு பற்றி பேசுகையில், நீதிமன்றம் ஓபிசி இடஒதுக்கீட்டு விவகாரத்தில் வரலாற்று சிறப்பும்க்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பை மதித்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யாது என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார், இந்தத் தீர்ப்பின்படி இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டு என வலியுறுத்துகிறார். மேலும்,

’சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றும்போது எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதியும் களையப்படவேண்டும்.

2011 சென்சஸ் படி அகில இந்திய அளவில் எஸ்சி மக்கள்தொகை 16.2% எஸ்டி மக்கள்தொகை 8.2%. அதற்கேற்ப எஸ்சி/ எஸ்டி ஒதுக்கீட்டு அளவை உயர்த்தவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.