×

சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக பிச்சாண்டி பதவியேற்பு!

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். இந்த சூழலில் நாளை தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கலைவாணர் அரங்கில்
 

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக் கொண்டார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த சூழலில் நாளை தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கலைவாணர் அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தொடரில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதனிடையே தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக பிச்சாண்டியை தமிழக அரசு நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டார்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு. பிச்சாண்டி பதவி ஏற்றுக்கொண்டார். தற்காலிக சபாநாயகர் பூச்சாண்டிக்கு ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். தற்காலிக சபாநாயராக பதவியேற்று கொண்ட பிச்சாண்டிக்கு ஆளுநர் மற்றும் முதல் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். நாளை சட்டப்பேரவை கூடும்போது தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.