×

பாஜகவில் இணையும் கு.க.செல்வம் : திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும் இவர் திமுக தலைமையிடத்துக்கு நெருக்கமானவர். இதனிடையே சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியது. சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக தனக்கு பதவி தரப்படாதால் அவர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டது. இதன் காரணமாக திமுக எம்எல்ஏ கு. க. செல்வம் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில்
 

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும் இவர் திமுக தலைமையிடத்துக்கு நெருக்கமானவர்.

இதனிடையே சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியது. சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக தனக்கு பதவி தரப்படாதால் அவர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டது.

இதன் காரணமாக திமுக எம்எல்ஏ கு. க. செல்வம் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் ஜெ. பி. நட்டா தலைமையில் பாஜகவில்  இணைய உள்ளார். இதனால் திமுக தலைமை மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். எம்எல்ஏ கு.க. செல்வம் பாஜகவில் சேர உள்ள நிலையில் ஸ்டாலின் அடுத்த முடிவு  குறித்து  ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் துரைமுருகன், ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.