டெல்லியில் ஜெ. பி. நட்டா தலைமையில் இன்று மாலை பாஜகவில் இணைகிறார் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்

 

டெல்லியில் ஜெ. பி. நட்டா தலைமையில் இன்று மாலை பாஜகவில் இணைகிறார் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்

திமுக எம்எல்ஏ கு. க. செல்வம் இன்று மாலை பாஜகவில் இணைகிறார். சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும் இவர் திமுக தலைமையிடத்துக்கு நெருக்கமானவர்.

டெல்லியில் ஜெ. பி. நட்டா தலைமையில் இன்று மாலை பாஜகவில் இணைகிறார் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்

இதனிடையே சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியது. சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி  தனக்கு தரப்படாதால் அவர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டது.சீனியர்கள் பலர் இருக்கும் நிலையில் சிற்றரசு நியமிக்கப்பட்டதால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்துள்ளனர்.

டெல்லியில் ஜெ. பி. நட்டா தலைமையில் இன்று மாலை பாஜகவில் இணைகிறார் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்

இந்நிலையில் திமுக எம்எல்ஏ கு. க. செல்வம் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் ஜெ. பி. நட்டா தலைமையில் இணைய உள்ளார். இதனால் திமுக தலைமை மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.