×

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…” தமிழக முதல்வரானார் ஸ்டாலின்… !

தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்த நாள்… திமுக தொண்டர்களின் கனவு நினைவான நாள்… மே 7 தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். ஆம் திராவிட கட்சியின் மற்றொரு தலைவர் முதல்வர் அரியணையை அலங்கரிக்கும் நன்னாள். 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஐந்து முறை முதல்வராக பதவியேற்று தமிழகத்தில் பொற்கால ஆட்சியை தந்த மு.கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார்.அதிமுகவில் ஜெயலலிதா, திமுகவின் மு.கருணாநிதி
 

தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்த நாள்… திமுக தொண்டர்களின் கனவு நினைவான நாள்… மே 7 தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். ஆம் திராவிட கட்சியின் மற்றொரு தலைவர் முதல்வர் அரியணையை அலங்கரிக்கும் நன்னாள்.

50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஐந்து முறை முதல்வராக பதவியேற்று தமிழகத்தில் பொற்கால ஆட்சியை தந்த மு.கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார்.
அதிமுகவில் ஜெயலலிதா, திமுகவின் மு.கருணாநிதி என்ற இரண்டு பெரும் ஆளுமைகள் இல்லாத தமிழக அரசியல் களத்தில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளார் மு.க. ஸ்டாலின். ஆரம்பம் முதலே நம்பிக்கையுடன் உறுதியாக தேர்தல் களத்தில் வலம் வந்த ஸ்டாலின் இன்று தமிழகத்தின் முதல்வராக அரியணை ஏறுவது என்பது பலருக்கும் மகிழ்ச்சியை வாரி வழங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும் விழாவில் ஆற்காடு வீராசாமி ,வைகோ, ப. சிதம்பரம், முத்தரசன், வேல்முருகன் ,சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,நவநீத கிருஷ்ணன் பங்கேற்றனர்.முன்னதாக பதவியேற்க உள்ள புதிய அமைச்சர்களை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார். மு.க. ஸ்டாலின் விழா நடைபெறும் இடத்திற்கு வந்த ஆளுநருக்கு ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.