×

27 சதவிகித இடஒதுக்கீடு வழக்கில் அன்புமணி ராமதாஸ் கேவியட் மனு தாக்கல்

2014 ஆம் ஆண்டிலிருந்து மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இடஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு நிலைப்பாடுகளையும் மாற்றங்களையும் செய்துவருகிறது. உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தது முதல் மருத்துவ மேற்படிப்புக்கு ஓபிசிக்கு இடஒதுக்கீடு கொடுக்க அவசியமில்லை என வாதிட்டது வரை பல உதாரணங்களைச் சொல்லலாம். தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு அமலில் இருக்கும் நிலையில் மருத்துவப் படிப்புக்கு மத்திய அரசு 27 சதவிகித இடஒதுக்கிடு எனச் சொல்வது சரியானது அல்ல என்ற குரல் தமிழக கட்சிகளிடமிருந்து
 

2014  ஆம் ஆண்டிலிருந்து  மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இடஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு நிலைப்பாடுகளையும் மாற்றங்களையும் செய்துவருகிறது. உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தது முதல் மருத்துவ மேற்படிப்புக்கு ஓபிசிக்கு இடஒதுக்கீடு கொடுக்க அவசியமில்லை என வாதிட்டது வரை பல உதாரணங்களைச் சொல்லலாம்.

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு அமலில் இருக்கும் நிலையில் மருத்துவப் படிப்புக்கு மத்திய அரசு 27 சதவிகித இடஒதுக்கிடு எனச் சொல்வது சரியானது அல்ல என்ற குரல் தமிழக கட்சிகளிடமிருந்து எழுந்தது. இதனால் திமுக, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. அதன் விசாரணை பல கட்டங்களில் நடைபெற்றது. அதன் தீர்ப்பு ஜூலை 27  வழங்கப்பட்டது.

இடஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசே சட்டரீதியாக உத்தரவை இட முடியும். அதனால், மத்திய அரசே இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் விஷயம் தொடர்பாக சட்டத்தை இயற்றி வெளியிட வேண்டும். இதை, அடுத்த  மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினைச் சேர்ந்த மாணவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு எனும் கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தப் பிரச்ன்னையில்கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) க்கும் பாமகவுக்கும் இடையே முரண்பாடு இருந்தது. அதை இரு கட்சிகளும் அறிக்கை போர் வழியே சந்தித்தார்கள்.

இந்நிலையில் 27 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக பாமவின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ட்விட் ஒன்றைப் பதிந்துள்ளார்.

அதில், மருத்துவப் படிப்பு (அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களில்) மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நான் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளர்..