’OBC இடஒதுக்கீடு விஷயத்தில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன்?’ மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி

 

’OBC இடஒதுக்கீடு விஷயத்தில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன்?’ மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி

மத்தியில் ஆளும் பாஜக அரசு இடஒதுக்கீடு தொடர்பான விஷயங்களில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை சென்ற முறை ஆட்சியின்போது கொண்டு வந்தது. இந்தியளவில் அதை பெரிதும் எதிர்த்தது தமிழக எம்பிகளே.

தற்போது, மருத்துவக் கல்விக்கான மேற்படிப்புகான ஓபிசியினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் மீண்டும் சிக்கல் வந்துள்ளது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு சார்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான முகாந்திரம் அளிக்கும் பதிலை அளிக்க வில்லை என்று பல கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. அவற்றில் பாமகவும் ஒன்று. ஆனால், பாமகவின் நிலைப்பாட்டில் மாறுபட்ட கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முன் வைக்கிறது.

’OBC இடஒதுக்கீடு விஷயத்தில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன்?’ மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி
K.Balakrishnan, CPM

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ’மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமான இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி தமிழக அரசும் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மருத்துவப்படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு இளநிலை படிப்பில் 15 சதமான இடங்களையும், முதுநிலை படிப்பில் 25 சதமான இடங்களையும் ஒதுக்க வேண்டும் என 1986 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பின் அடிப்படையில், அகில இந்திய தொகுப்பிற்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பின்னர், முதுநிலையில் 25 சதமான இடங்களில் இருந்து 50 சதமானமாக உயர்த்தப்பட்டது. உச்சநீதிமன்றம் இத்தொகுப்பில் இடஒதுக்கீடு கொள்கை அமலாக்க வேண்டும் என குறிப்பிடாமல் விட்டுவிட்டது.

’OBC இடஒதுக்கீடு விஷயத்தில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன்?’ மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி
2006 ஆம் ஆண்டில் அபயநாத் என்பவர் தொடுத்த வழக்கில் பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அகில இந்திய தொகுப்பில் பட்டியல் இனமக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் 15 மற்றும் 7.5 சதமானம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பட்டியல் இனமக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் அகில இந்திய தொகுப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் வேறுசில இடஒதுக்கீடுகளையும் மத்திய அரசு அமலாக்கி வருகிறது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இதுவரை அகில இந்திய தொகுப்பு இடங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதனால், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி சொல்லில் அடங்காது.

இந்நிலையில், அகிலஇந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமான இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசும் 1994-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு 50 சதமானம், பட்டியல் இன மக்களுக்கு 18 சதமானம், பழங்குடி இனமக்களுக்கு 1 சதமானம் ஆக மொத்தம் 69 சதமான இடஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் கோரப்பட்டுள்ளது.

’OBC இடஒதுக்கீடு விஷயத்தில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன்?’ மார்க்சிஸ்ட் கட்சி கேள்விஅனைத்துக்கட்சிகளும் தமிழக அரசும் ஒத்தக் கருத்தோடு இந்த கோரிக்கையை முன் வைத்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி 27 சதமானம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையின்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் 23 சதமான இடங்களை விட்டுக்கொடுப்பதாக அமைந்துள்ளது. இது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை சீர்குலைப்பதாக உள்ளது.

மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்கையில் இடஒதுக்கீடு குறித்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்துள்ள விதியின் படி அந்தந்த மாநிலங்களில் அமலில் இருக்கும் இடஒதுக்கீடு கொள்கையினை செயல்படுத்த வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதியின்படி தமிழகத்தில் இருந்து அகில இந்திய தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டப்(1994) படியே இடஒதுக்கீடு அமலாகுவது மருத்துவ கவுன்சிலின் விதிப்படி கட்டாயம் ஆகும். இதன்படி பிசி, எஸ்சி, எஸ்டி முறையே 50, 18, 1, சதமான இடங்கள் கிடைத்திருக்க வேண்டும்.

’OBC இடஒதுக்கீடு விஷயத்தில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன்?’ மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி
Dr. S.Ramadoss, PMK

இடஒதுக்கீடு சட்டபடி பிற்பட்டோருக்கான 50 சதமான இடங்களை வழங்காமல் கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. இதனால், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் கிடைத்திருக்க வேண்டிய இடங்கள் பறிபோயுள்ளன. அதேபோல பட்டியல் இனமக்களுக்கு 18 சதமான இடம் வழங்குவதற்கு மாறாக 15 சதமான இடங்களை மட்டுமே வழங்கி வருகிறது. மத்திய அரசின் சமூகநீதிக்கு எதிரான போக்கைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் திரண்டு குரல்கொடுக்க முன்வந்திருப்பது பாரட்டத்தகுந்தது. ஆனால், சமூகநீதி பேசும் பாட்டாளி மக்கள் கட்சி பிற்படுத்தபட்ட மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்கும் வகையில் நீதி மன்றத்தில் வாதாடுவது வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கும் செயலாகும். பாமக தன்னுடைய நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.