×

கொரோனா பரிசோதனைகளை இரண்டு மடங்காக உயர்த்த திட்டம்: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

அடுத்த ஒன்றிரண்டு மாதத்திற்குள் கொரோனா பரிசோதனைகளை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள்வோர் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் வெறும் 7.85 சதவிகிதமாக இருந்த குணமடைந்தோர் விகிதம் தற்போது 64.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அங்கு 88 சதவிகிதம் பேர்
 

அடுத்த ஒன்றிரண்டு மாதத்திற்குள் கொரோனா பரிசோதனைகளை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள்வோர் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் வெறும் 7.85 சதவிகிதமாக இருந்த குணமடைந்தோர் விகிதம் தற்போது 64.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அங்கு 88 சதவிகிதம் பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர். லடாக்கில் 80 சதவிகிதம் பேரும், ஹரியானாவில் 78 சதவிகிதம் பேரும், அசாமில் 76 சதவிகிதம் பேரும் மீண்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 73 சதவிகிதம் பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடுமுழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து 10.20 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.