ஆந்திராவில் அதிவேகமாக பரவும் கொரோனா! இன்று 10,167 பேருக்கு பாதிப்பு

 

ஆந்திராவில் அதிவேகமாக பரவும் கொரோனா! இன்று 10,167 பேருக்கு பாதிப்பு

2019 டிசம்பரில் சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று அறியப்பட்டது. அது நாளடைவில் உலகம் முழுவது பரவத் தொடங்கி விட்டது, கொரோனா நோய்த் தொற்றல் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவை வாட்டி எடுக்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு. இதையடுத்து நோய்த் தொற்றுவது கட்டுப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எண்ணிக்கை குறைந்த பாடில்லை. மாறாக நாள்தோறும் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. தொடக்கத்தில் ஆந்திராவில் நோய்த் தொற்று கண்டறியப்பட்டதும் அம்மாநில அரசு உஷாரானது. உடனே களத்தில் இறங்கி பாதுகாப்பு அம்சங்களை விரைவு படுத்தியது. அதனால், ஆந்திராவில் ஓரளவு கட்டுக்குள் இருந்தது கொரோனா. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக ஆந்திராவிலும் கோரோனா நோய்த் தொற்று அதிகரிக்கும் வேகம் உயர்ந்துவருகிறது.

ஆந்திராவில் அதிவேகமாக பரவும் கொரோனா! இன்று 10,167 பேருக்கு பாதிப்பு

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பத்தாயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்று மட்டும் புதிதாக 10 ஆயிரத்து 167 தொற்றுகள் அறியப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆந்திராவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மேலும் 24 பேர் இறந்துள்ள நிலையில் ஒட்டுமொத்த இறப்புகள் ஆயிரத்து 281 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன் வரை ஆந்திராவில் கொரோனா குறைவாக இருந்த நிலையில் சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதனால் தொற்றுகளை கண்டறிவதும் அதிகரித்துள்ளது