×

மாமியார் 2-வது திருமணம் செய்ததால் ஆத்திரம்… ஓட்டல் ஊழியரை குத்திக்கொன்ற மருமகன்…

விழுப்புரம் விழுப்புரத்தில் ஓட்டல் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், வடமாநில இளைஞரை போலீசார் கைதுசெய்தனர். விழுப்புரம் ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் சித்ரா(39). இவருக்கு கௌசல்யா(24) என்ற மகளும், சக்திவேல்(22) என்ற மகனும் உள்ளனர். கணவர் உயிரிழந்த நிலையில் குழந்தைகள் இருவரையும் சித்ரா வளர்த்து வந்தார். இந்த நிலையில் கௌல்யாவுக்கு, விழுப்புரத்தில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளி ஆக பணிபுரிந்த சோனு சர்மா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே, சித்ராவுக்கு விழுப்புரத்தில் உள்ள ஓட்டலில்
 

விழுப்புரம்

விழுப்புரத்தில் ஓட்டல் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், வடமாநில இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.

விழுப்புரம் ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் சித்ரா(39). இவருக்கு கௌசல்யா(24) என்ற மகளும், சக்திவேல்(22) என்ற மகனும் உள்ளனர். கணவர் உயிரிழந்த நிலையில் குழந்தைகள் இருவரையும் சித்ரா வளர்த்து வந்தார். இந்த நிலையில் கௌல்யாவுக்கு, விழுப்புரத்தில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளி ஆக பணிபுரிந்த சோனு சர்மா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே, சித்ராவுக்கு விழுப்புரத்தில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்த உளுந்தூர்பேட்டை அடுத்த ஏ.சாத்தனூரை சேர்ந்த பாலமுருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவரை கடந்த மாதம் சித்ரா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சோணு சர்மாவுக்கு இரண்டாவது திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்த சித்ராவுடன் சோணு சர்மா தகராறில் ஈடுபட்டு உள்ளார். அதனை பாலமுருகன் தட்டிக்கேட்டபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சோணு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலமுருகனை சராமாரியாக குத்திகொன்றார். மேலும், தடுக்க முயன்ற சித்ராவையும் அவர் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார்.

தகவல் அறிந்த விழுப்புரம் நகர போலீசார் சித்ராவை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதித்தனர். மேலும், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், தலைமறைவாக இருந்த சோணு சர்மாவை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.