×

அரியலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு ரங்கோலி கோலம்!

அரியலூர் தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து, அரியலூர் மாவட்டத்தில் ரங்கோலி கோலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமான பல்வேறு ரங்கோலி கோலங்களை வரைந்து அசத்தினர். இதனை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ரத்னா
 

அரியலூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து, அரியலூர் மாவட்டத்தில் ரங்கோலி கோலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமான பல்வேறு ரங்கோலி கோலங்களை வரைந்து அசத்தினர். இதனை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ரத்னா நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மூலம் அரியலூர் மற்றும் ஜெயங்கொணடம் சட்டமன்ற தொகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவு ஏற்படுத்தும் விதமாக வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும், ஆட்சியர் ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் வரும் 16ஆம் தேதி வரை பிரசாரத்தில ஈடுபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.