×

கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிருடன் மீட்பு!

சேலம் சேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய இளைஞரை தீயணைப்புத்துறையினர் பத்திராமாக மீட்டனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் வடக்கு காடு கிராமத்தை சேர்ந்தவர் ஊமையன். இவரது மகன் சத்தியமூர்த்தி. விவசாயி ஆன இவர், இன்று காலை தனது தோட்டத்திற்கு விவசாய பணிக்கு சென்றிருந்தார். அப்போது, கிணற்றில் நீர் மட்டத்தை எட்டிப் பார்த்தபோது எதிர்பாராத விதமாக 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். சத்யமூர்த்தி கிணற்றில் தத்தளிப்பதை கண்ட அருகில் இருந்தவர்கள்,
 

சேலம்

சேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய இளைஞரை தீயணைப்புத்துறையினர் பத்திராமாக மீட்டனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் வடக்கு காடு கிராமத்தை சேர்ந்தவர் ஊமையன். இவரது மகன் சத்தியமூர்த்தி. விவசாயி ஆன இவர், இன்று காலை தனது தோட்டத்திற்கு விவசாய பணிக்கு சென்றிருந்தார். அப்போது, கிணற்றில் நீர் மட்டத்தை எட்டிப் பார்த்தபோது எதிர்பாராத விதமாக 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார்.

சத்யமூர்த்தி கிணற்றில் தத்தளிப்பதை கண்ட அருகில் இருந்தவர்கள், இதுகுறித்து கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு மூலம் இறங்கி சத்திய மூர்த்தியை மீட்டும் முற்சியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சத்யமூர்த்தியை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள், அவரை கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைககாக அனுமதித்தனர். இளைஞரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.