×

தளி அருகே கிணற்றில் தவறி விழுந்து தாய், மகன் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்துள்ள சென்னமாலம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாதே கவுடு. இவருக்கு ரத்தினம்மாள் என்ற மனைவியும், மதேஷ் என்ற மகனும் உள்ளனர். மதேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற ரத்தினம்மாள், உடன் மாதேஷையும் அழைத்துச் சென்றுள்ளார். மாதேஷுக்கு தாகம் எடுத்ததால், அருகில் இருந்த விவசாய கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றுள்ளார்.
 

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்துள்ள சென்னமாலம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாதே கவுடு. இவருக்கு ரத்தினம்மாள் என்ற மனைவியும், மதேஷ் என்ற மகனும் உள்ளனர். மதேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற ரத்தினம்மாள், உடன் மாதேஷையும் அழைத்துச் சென்றுள்ளார்.

மாதேஷுக்கு தாகம் எடுத்ததால், அருகில் இருந்த விவசாய கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ரத்தினம்மாள், கிணற்றில் குதித்து மகனை மீட்க முயன்றார். ஆனால் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கி மாயமாகினர்.

இதனை கண்டு, அந்த பகுதி இளைஞர்கள் கிணற்றில் குதித்து தேடியபோது, இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவல் அறிந்த தளி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.