×

அரசுப்பேருந்து நடத்துனர் வீட்டில் தங்க நகைகள், பணம் கொள்ளை!

கோவை பொள்ளாச்சி அருகே அரசுப் பேருந்து நடத்துனர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 8 சவரன் நகை மற்றும் 15 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ராசக்காபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அரசுப் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சதீஷ்குமார் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு, மாலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த
 

கோவை

பொள்ளாச்சி அருகே அரசுப் பேருந்து நடத்துனர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 8 சவரன் நகை மற்றும் 15 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ராசக்காபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அரசுப் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சதீஷ்குமார் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு, மாலை வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதனுள் இருந்த 8 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து, சதீஷ்குமார் மகாலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.