×

கோவையில் கடன் தொல்லையால் தம்பதி தூக்கிட்டு தற்கொலை!

கோவை கோவையில் கடன் தொல்லையால் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை சிங்காநல்லூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முகமது அனீஸ் (44). இவர் மின்வாரிய கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மும்தாஜ் (39). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்ததில் முகமது அனிஸ்க்கு, முதுகு தண்டவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
 

கோவை

கோவையில் கடன் தொல்லையால் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சிங்காநல்லூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முகமது அனீஸ் (44). இவர் மின்வாரிய கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மும்தாஜ் (39). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்ததில் முகமது அனிஸ்க்கு, முதுகு தண்டவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதற்காக அவர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாததால் குடும்ப செலவிற்காக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் கணவன் – மனைவி இருவரும் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். மகள் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் மகன் மட்டும் உடனிருந்து வந்துள்ளார். இன்று காலை மகன் கடைக்கு சென்ற நிலையில், முகமது அனீஸ் மற்றும் அவரது மனைவி மும்தாஜ் ஆகியோர் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சிறிது நேரத்திற்கு பின் வீட்டிற்கு வந்த மகன் தாயும், தந்தையும் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து தகவலின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.