×

திருமணமான 45 நாட்களே ஆன நிலையில் மகளை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை : அதிர வைக்கும் காரணம்!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் டவுன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி- ஜெயந்தி தம்பதியின் மூத்த மகள் செந்தாரகை (23). பாலாஜி, தீயணைப்பு துறை அலுவலகத்தில் வேலைப்பார்க்கிறார். ஜெயந்தி, சிபிஐஎம் கட்சியின் மாதர் சங்கத் தலைவியாக இருக்கிறார். செந்தாரகைக்கும் உத்திரமேரூர் நரசிம்மநகரைச் சேர்ந்த யுவராஜிக்கு கடந்த மே மாதம் 24 ஆம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து செந்தாரகை தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இதை தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி அம்மா ஜெயந்தியுடன் சமையல் வேலைக்கு உதவி
 

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் டவுன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி- ஜெயந்தி தம்பதியின் மூத்த மகள் செந்தாரகை (23). பாலாஜி, தீயணைப்பு துறை அலுவலகத்தில் வேலைப்பார்க்கிறார். ஜெயந்தி, சிபிஐஎம் கட்சியின் மாதர் சங்கத் தலைவியாக இருக்கிறார். செந்தாரகைக்கும் உத்திரமேரூர் நரசிம்மநகரைச் சேர்ந்த யுவராஜிக்கு கடந்த மே மாதம் 24 ஆம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து செந்தாரகை தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதை தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி அம்மா ஜெயந்தியுடன் சமையல் வேலைக்கு உதவி செய்துவிட்டு செந்தாரகை குளிக்கச்சென்றாள். குளியலறையிலிருந்து நீண்ட நேரமாகியும் அவள் வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த ஜெயந்தி, குளியலறையின் கதவை தட்டினார். அப்போதும் எந்தவித பதிலும் வரவில்லை. அதனால் குளியலறையில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது குளியலறைக்குள் செந்தாரகை மயங்கி கிடப்பது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த ஜெயந்தி, பாலாஜி ஆகியோர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மூச்சு பேச்சு இல்லாமல் செந்தாரகை கிடந்தார். அவருக்கு ஜெயந்தியும் பாலாஜியும் முதலுதவி செய்தனர். ஆனால் செந்தாரகை கண்விழிக்கவில்லை. இதை தொடர்ந்து செந்தாரகை இறந்தது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து உத்தரமேரூர் காவல் நிலையத்துக்கு தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து விசாரித்தனர். பின்னர் செந்தாரகையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 174 (3) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் செந்தாரகை கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

இந்நிலையில் போலீசார் தந்தை பாலாஜியை கைது செய்து விசாரணை நடத்தியதில், , செந்தாரகை திருமணத்துக்கு முன்பு வேறு ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாலாஜி அவருக்கு யுவராஜூடன் திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே யுவராஜூடன் வாழ மாட்டேன் என செந்தாரகை தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அவருக்கு எவ்வளவு சமாதானம் கூறியும் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த பாலாஜி மகளின் கழுத்தை நெரித்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார். கொலையை மறைக்க குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடியுள்ளார்.

இதையடுத்து கைதான பாலாஜி மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.