×

13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் கைது

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைகளைக் கொடுத்த இளைஞர் லட்சுமணன் கைது செய்யப்பட்டிருக்கிறார். சமீபகாலமாகவே பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவிட்டது. சிறுமிகள் பாலியல் வன்முறைகளால் சிதைக்கப்படும் செய்திகளை நாம் தொடர்ந்து படித்துக்கொண்டே வருகிறோம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது உப்பூர் எனும் சிறுகிராமம். திருத்துறைப் பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய ஊர்கள் இதற்கு அருகில் உள்ளவை. அந்த ஊரில் வசித்துவரும் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு இரண்டு மகள்கள். மூத்தப் பெண் 13 வயதும், இளைய பெண் 7
 

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைகளைக் கொடுத்த இளைஞர் லட்சுமணன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சமீபகாலமாகவே பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவிட்டது. சிறுமிகள் பாலியல் வன்முறைகளால் சிதைக்கப்படும் செய்திகளை நாம் தொடர்ந்து படித்துக்கொண்டே வருகிறோம்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது உப்பூர் எனும் சிறுகிராமம். திருத்துறைப் பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய ஊர்கள் இதற்கு அருகில் உள்ளவை. அந்த ஊரில் வசித்துவரும் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு இரண்டு மகள்கள். மூத்தப் பெண் 13 வயதும், இளைய பெண் 7 வயதுமே கொண்டவர்கள்.

இவர்கள் எப்போதும் தெருக்களில், அக்கம் பக்கத்து வீடுகளில் விளையாடச் செல்வது வழக்கம். பொதுவாக கிராமங்களில் இந்தப் பழக்கம் எல்லாச் சிறுவர்களிடம் இயல்பாக இருக்கக்கூடியதுதான்.

13 வயதுள்ள‌ மூத்தப் பெண்ணிடம் அவள் வீட்டுக்கு அருகே வசிக்கும் லெட்சுமணன் எனும் இளைஞன் பேச்சுக்கொடுத்திருக்கிறான். பிறகு சில நிமிடங்களில் அந்தச் சிறுமியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறாள். அந்தச் சிறுமி அவனிடமிருந்து தப்பி ஓடி வந்துவிட்டாள். அம்மா, அப்பாவிடம் நடந்தை அழுகையோடு சொல்லியிருக்கிறாள். (பல சிறுமிகள் பயந்துகொண்டு பெற்றோரிடம் சொல்வது கிடையாது. இன்னும் சில இடங்களில் வீட்டில் அல்லது தெரிந்தவர்களிடம் இந்த விஷயத்தைச் சொன்னால் கொன்றுவிடுவேன், அடிப்பேன் என மிரப்படுவதும் உண்டு. அதற்கு பயந்துகொண்டு யாரிடம் சொல்லாத குழந்தைகளும் ஏராளம்)

சிறுமியின் பெற்றோர் திருத்துறைப்பூண்டி மகளிர் காவல் நிலையத்தில் லட்சுமணன் மீது புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறை லட்சுமணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

குழந்தைகள் மீதான குற்றங்கள் நடப்பது அவர்களுக்கு மிக பழக்கம் கொண்ட நபர்களால்தான் என்று உளவியல் மருத்துவர்களும் குழந்தை நலச் செயல்பாட்டாளர்களும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். அதற்கு சரியானதொரு உதாரணமாக லட்சுமணனைச் சொல்லலாம்.

போக்சோ சட்டம்: குழந்தைகளை, பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க உருவாக்கப் பட்ட சட்டம் போக்சோ (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012)