சாத்தான்குளம் சிறுமி வழக்கில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரனை

 

சாத்தான்குளம் சிறுமி வழக்கில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரனை

சாத்தான் குளம் அருகே உள்ள ஓடை கரையில் ஏழு வயதுள்ள ஒரு சிறுமியின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது. அடையாளம் தெரியாத சிலர் ஒரு டிரமில் கொண்டு வந்து சிறுமியை அங்கே போட்டதாகச் சிலர் சொல்கின்றனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையின் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இச்சிறுமி கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

சாத்தான்குளம் சிறுமி வழக்கில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரனை

இந்தச் சிறுமியின் கொலையைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்தக் குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சாத்தான் குளத்து சிறுமி வழக்கில் தானே முன்வைந்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘சாத்தான்குளத்தில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்ந்து 8வது முறையாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் இதுவரை 3 வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் சிறுமி வழக்கில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரனை

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்களிடம் வழக்கு தொடர்பான முதற்கட்ட தகவல்களை மாண்புமிகு ஆணைய உறுப்பினர் Dr.R.G.ஆனந்த் அவர்கள் கேட்டறிந்துள்ளார். வெகு விரைவில் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என Dr.R.G.ஆனந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளது.