×

‘மெஹந்தி சர்க்கஸ்’ சுகமான அனுபவம்…ஒரு சாமானியனின் காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள்!’ தயாரிப்பாளரின் தந்தை நெகிழ்ச்சி!

சினிமா கனவோடு முதலில் சென்னைக்கு கிளம்பி வந்தவர் இவர்தானாம். சினிமாவின் சதுரங்க விளையாட்டில் சிக்கி இப்போதுதான் முதல் படம் இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும்.அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள்.இயக்குனர் ராஜுமுருகனின் படங்களும்,எழுத்தும் அப்படித்தான்.அப்படி ராஜு முருகன் கதை,வசனம் எழுதி அடுத்து வரவிருக்கிற படம் ‘மெஹெந்தி சர்க்கஸ்’.இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் வேறு யாருமல்ல…ராஜுவின் சொந்த
 

சினிமா கனவோடு முதலில் சென்னைக்கு கிளம்பி வந்தவர் இவர்தானாம். சினிமாவின் சதுரங்க விளையாட்டில் சிக்கி இப்போதுதான் முதல் படம் இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது

ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும்.அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள்.இயக்குனர் ராஜுமுருகனின் படங்களும்,எழுத்தும் அப்படித்தான்.அப்படி ராஜு முருகன் கதை,வசனம் எழுதி அடுத்து வரவிருக்கிற படம் ‘மெஹெந்தி சர்க்கஸ்’.இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் வேறு யாருமல்ல…ராஜுவின் சொந்த அண்ணன் சரவண ராஜேந்திரன்.

சினிமா கனவோடு முதலில் சென்னைக்கு கிளம்பி வந்தவர் இவர்தானாம். சினிமாவின் சதுரங்க விளையாட்டில் சிக்கி இப்போதுதான் முதல் படம் இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.சில பேர் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்ற மாதிரி…பாஸ்,ஒரு நிமிஷம்,இந்த டயலாக்கை நீங்க வேற மாதிரி புரிஞ்சு கொழப்பிக்க போறீங்க! நெஜமாவே தரமான படைப்போடு தனது புது கணக்கை தொடங்கியிருக்கிறார் சரவண ராஜேந்திரன்.

‘மெஹந்தி சர்க்கஸ்’ ஒரு சுகமான அனுபவம்.ஒரு சாமானியனின் காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள்.குழந்தைகளை இரண்டு மணி நேரம் ஜாலியாக வைத்திருப்பது சர்க்கஸ் கலை தான்.அந்தக்கலை இப்போது அழிந்து வருகிறது.அதற்கு சினிமாவும் ஒரு காரணம். அப்படியொரு கலையை சினிமாவில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய அனைவருமே படம் பற்றி நிறையவே சொலாகித்து பேசினார்கள்.இந்த மாதிரி கதைகளை தயாரிக்க முன் வருகிற தயாரிப்பாளர்கள் ரொம்ப முக்கியம்.அப்படி இந்தக் கதையைக் கேட்டு முதலில் ஓகே சொன்னவர்  தயாரிப்பாளர்  ஞானவேலராஜாவின் தந்தை ஈஸ்வரன்.இந்த விழாவில் சொன்னதுதான் இந்தப் படைப்புக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.

“இந்தப்படத்தை தயாரித்த என் மகனுக்கு முதல் நன்றி. இந்தக் கதையை ராஜு முருகனும் அவரது அண்ணன் சரவண ராஜேந்திரனும் சொன்னார்கள். சொன்னபோதே வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். இந்தப்படம் ஒரு காதல் காவியம்.இன்று எத்தனையோ பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இந்தப்படம் அதற்கு மாற்றாக இருக்கும். நிச்சயமாக இந்தப்படம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும். 

தயவுசெய்து இந்தப்படத்தை இளைஞர்கள் தியேட்டரில் வந்து காணவேண்டும். படத்தில் பணியாற்றிய அனைவரும் அருமையான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள்.இந்தப்படம் மிகப்பெரிய பெயரை சம்பாதிக்கும்” என்றார்.

இதையும் வாசிங்க

‘காப்பி’ அடித்த கண்ணழகி: கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…!