×

“தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்” : கவிஞர் வைரமுத்து ட்வீட்!

2019 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வரைவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வழங்கியது..அதில் உள்ள பல அம்சங்கள் தமிழகத்தில் பல எதிர்ப்புகளை உருவாக்கியது. குறிப்பாக, கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டன. நேற்று முன்தினம் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன.தமிழ்நாடு அரசும் முதல்வரும், அமைச்சரவையும் இன்னும் சில
 

2019 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வரைவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வழங்கியது..அதில் உள்ள பல அம்சங்கள் தமிழகத்தில் பல எதிர்ப்புகளை உருவாக்கியது. குறிப்பாக, கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டன.

நேற்று முன்தினம் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன.தமிழ்நாடு அரசும் முதல்வரும், அமைச்சரவையும் இன்னும் சில நாட்களில் இதுபற்றி முடிவு எடுக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. அவர்கள் ஆழ்ந்து பரிசீலித்து, தெளிவான, துணிவான முடிவு எடுக்கத் தவறக்கூடாது என்பது நமது வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில், “அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும்,  எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும்
இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத்
தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்;
திராவிடக் கொடியும் பிடிப்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.